பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 93 முதலியவை எத்துணைப் பழமையானவை என்பதை நோக்குக. அவ்வளவு வலுவாக அடிப்படை அமைந்து விட்டது. உங்களுடைய புற வாழ்க்கை எப்படி மாறினாலும் அது பற்றிக் கவலை இல்லை. சமுத்திரத்தின் மேலே அலையடித்தாலும், புயல் அடித்தாலும், அடிப்பகுதி அசையாமல் இருக்கிறதே, அதுபோல அடிப்படை வலுவாகக் கட்டப்பட்டது இந்தக் கீழைநாட்டுச் சமயம். அவர்களைப் பொறுத்த மட்டிலே அறிவின் துணை கொண்டு கட்டப்பட்ட அது புதிய புதிய கருத்துகளை, சோதனைகளை மேற்கொள்ள - வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது. இது, அவர் களின் சமயத்திலேயே ஊறிவிட்டது. நம் ஊரில் ஒருவன் விரைவாக நடந்தால்கூட அவன் விரைவைச் சுட்டி, "ஏன் அவசரப்படுகிறாய்' என்பார்கள்? அப்படி அமைதியாக வாழ்ந்து ஒரு பழக்கம் பெற்று விட்டோம். அவர்கள் அவசர அவசரமாக முன்னேறுகிறார்கள். இற்றை நாளில் அந்த அவசரத்தில் ஒரு பகுதி நமக்கும் வேண்டும் என்பது உண்மைதான். நம் அமைதியில் ஒரு பகுதி அவர்கட்கும் வேண்டும். நம் நாட்டினருடைய நடுநிலை ஓர் 50 சதவிகிதமும் அவர்களுடைய அவசர முன்னேற்றம் 50 சதவிகிதமும் சேருமேயானால் ஒரு பி.எஸ்.ஜி. நிறுவனம் கிடைக்கும். நாமம் போட்டுக் கொண்டு இருக்கும் ஒருவர் இவ்வளவு நிறுவனங் களையும் தோற்றுவித்து இயக்கினாரென்றால் கிழக்கையும் மேற்கையும் இணைத்து விட்டார் என்பதுதானே பொருள்? நாமம் போட்டுச் சமயவாழ்க்கை வாழ்தல் என்பது கீழை நாட்டு நாகரிகம்; எஞ்சினியரிங் எண்டர்பிரைசஸ் வைப்பது மேலை நாட்டு நாகரிகம். இவை இரண்டையும் நினைத்து மேற்கும் கிழக்கும் இணையும் இணைப்புப்