பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ix

 (Proton) என்ற கருவையும் அதனைச் சுற்றி ஓயாது வட்டமிட்டுக் கொண்டிருக்கும் மின்னணுக்களையும் (Electron) கொண்டதாகும். இந்த மின்அணு பரமானுவைச் சுற்றி ஓயாது ஒடிக் கொண்டிருந்தால் அதனால் ஒலி உண்டாகத் தானே செய்யும். இவ்வோட்டத்தில் ஒலி உண்டாகிறதா, உண்டானால் அது எப்படி வெளிப்படுகிறது என்பது பற்றி இன்றுவரை விஞ்ஞானிகள் கவலைப்படவில்லை; அது பற்றி ஆராயவும் இல்லை. ஒரு வேளை இந்த ஒலியைத் தான் ஆதிநாதம் என்று நம் முன்னோர்கள் கூறினார்களோ தெரியவில்லை.

எந்த ஒலியும் அதிர்வுகள் வடிவில் வெளிப் படுகிறது என்று கண்டோம். எழுத்துகளுக்குள்ள இந்த ஒலி ஆற்றலைக் கண்ட நம் முன்னோர் இவற்றை ஒழுங்குபடுத்தி பல அதிர்வெண்களை உடைய எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் பல புதிய அதிர்வெண்களை உடைய சொற்களைத் தோற்று வித்தனர். இங்ங்னம் ஒன்று சேர்க்கப்பட்ட ஒலிகள் மனமாசைக் கழுவும் ஆற்றலுடையவை என்றும் கண்டனர். அந்த ஒலிக் கூட்டங்களுக்கு மந்திரங்கள் என்று பெயரிட்டனர்.

மந்திர ஒலிகள் நாம் நம் காதால் கேட்கக் கூடிய அதிர்வெண்களைக் கொண்ட ஒலிக் கூட்டமே யாகும். என்றாலும் சில எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண்களின் அளவுகளைக் கணக்கிட்டு அவ்வெழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் மந்திரங்கள் புதிய வடிவு பெறுகின்றன; மாபெரும் ஆற்றலைப் பெறுகின்றன.

நாம் காதால் கேட்கும் சாதாரண அதிர் வெண்களை உடைய ஒலிக் கூட்டங்களுக்கு