பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஆன்மிகமும் உலகாயதமும் உலகாயதம் என்பதும் ஆன்மிகம் என்பதும் இன்று நேற்றுத் தோன்றியவை அல்ல. தாயுமானவர் சொல்லுவார் "என்று நீ அன்று நான் உனது அடிமை அல்லனோ” என்று. சிவஞான போதம் பாடிய பெரியவர், “இலது என்றலின் உளது” என்று பேசுகிறார். 'ஒரு பொருள் இல்லை என்று ஒருவன் பேச ஆரம்பித்தாலே, அது இருக்கின்றது என்பதற்கு அடையாளம் என்று கூறுவார். என்று ஒரு பொருளைப் பற்றி உண்டு, இல்லை என்ற வாதம் தொடங்கிற்றோ, அன்றே இரு சாராரும் அது உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டவர் என்று தர்க்க ரீதியாகப் பேசுவார் கூறுவர். ஆகவே, இது இன்று நேற்றுத் தோன்றிய தர்க்கவாதம் அன்று. மேலை நாட்டாரைப் பொறுத்தமட்டில் உலகாயதமாகிய மெட்டீரியலிசம் இருக்கிறதே, அதற்கு மெருகு Glórrógão, Gustavssions 2 Guðmugilb (historical materialism) என்றும், விஞ்ஞான முறை உலகாயதம் (dialectical materialism) என்றும் இரண்டு வழியாகப் பார்க்கத் தொடங்கினர். ஆனால், இந்த நாட்டுக்காரரைப் பொறுத்தமட்டில் மிகமிகப் பழமையான வேத