பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 101 காரணமாகப் பல்வேறு வடிவு பெறுகின்றன என்று மட்டும் சொல்லி விட்டனர். டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களும் "ஏன் சேர்ந்தன என்பதற்கு இவர்கள் விடை காணாமற் போய்விட்டார்களே” என்று வியந்து கேட்கிறார். 'எப்படிச் சேர்ந்தது என்ற வினாவுக்குத் தாமே ஒவ்வோர் அளவில் சேர்ந்தன. என்று கூறிவிடலாம். ஏன் சேர்ந்தன என்பதற்குப் பதிலே இல்லை. முடிவை மட்டும் பேசுகிறான், உலகாயதவாதி, "ஒடும் அவை ஆகிய உறுகாரியம் உலந்தால் ஆதியாம்" என்றான். ‘புதியதாக எப்படியய்யா ஒரு குணம் உண்டாகும் என்று கேட்டதற்கு "வெற்றிலை பச்சை நிறம், பாக்கு தளிர் நிறம், சுண்ணாம்பு வெண்மை நிறம், இந்த மூன்றும் சேர்ந்தால் சிவப்பாதல் போல அணுக்கள் என்னென்ன விகிதாசாரத்தில் ஒன்றாகச் சேருகின்றனவோ அவைகட்கு ஏற்பக் குணங்களைப் பெற்றன. இதில் என்ன ஆச்சரியம்" என்றான். கன்மம், உரு, இறைவன் என்றெல்லாம் ஆன்மிகவாதிகள் பேசுவனவற்றைக் கேட்டுச் சிரிக்கிறான் உலகாயத வாதி. "காணப்படும் பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்று கேட்டாய். அதற்கு அழகிய விடை கூறியுள்ளேன். இதற்கு மேல் காணப்படாததாகிய உலகை நீயாகக் கற்பனை செய்து கன்மம் என்றும் கடவுள் என்றும் ஏன் பேசுகிறாய்? நீ கூறும் கடவுளின் வடிவம்தான் என்ன?’ என்று உலகாயதவாதி கேட்பான். அதற்கு ஆன்மிகவாதியோ “அவன் அருவானவன்” என்றான். "ஆண்டவன் அருவ மென்னில் ஆகாயமும் அருவம்தானே? அருவமே இறைவனாகில் அறிவன்று ஆகாயமாகும்” என்று கூறி மறுக்கின்றான் உலகாயதவாதி. இல்லை, உருவம் உண்டு என்றான் சமயவாதி, "உருவமேல் இப் பூதக்