பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ம் அ.ச. ஞானசம்பந்தன் கூட்டத்தில் ஒன்றென்றான்" உலகாயதவாதி. அடுத்துச் சொன்னான் ஆன்மிகவாதி: "இல்லை ஐயா ஆண்டவன் அருவுருவாக விளங்குகின்றான்" என்று. "உருவமும் அருவமும் கலந்தது கடவுள் என்றால் இரண்டும் கலந்து நிற்றல் இயலுமா? அருவமாகிய விண்வெளியில் உருவமாகிய கல்லைத் துரக்கி எறிந்தால் அங்கேயே நிலைத்து நிற்குமா” என்று கேட்கின்றான் உலகாயதவாதி. எப்பிக்குரியன் ஃபிலாசஃபி (epicurian philosophy) என்பது எகிப்து நாட்டில் புகழ்பெற்று விளங்கிய ஒன்று. நம்முள் பலருக்கு அந்தத் தத்துவத்தின் பெயர் தெரியாது. ஆனால், வாழ்க்கை யில் அதனைத்தான் கொண்டு செலுத்துகிறோம். அதாவது "வாழ்வு நிலையற்றது, எனவே, கிடைத்த வசதிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்துக் கொள்" என்பதுதான் அந்தத் தத்துவம். அதனை விளக்க எகிப்து நாட்டு விருந்தில் உண்ணச் செல்வதற்கு முன்பு ஒரு சிறிய பெட்டியைக் கொடுப்பார்களாம். அதனைத் திறந்து பார்த்தால் அதனுள் இறந்த பிணப் பொம்மை ஒன்று இருக்குமாம். அதற்கு அடியில், EAT AND BE MERRY BEFORE YOU BECOME LIKE THIS என்று எழுதப்பட்ட காகிதம் இருக்குமாம். அற்புத மான தத்துவம் ! நம்மில் பலர் பயிற்சியில் கொண்டாடும் இந்த நிலையை உலகாயதவாதி எடுத்துக் காட்டுகிறான், "இல்லாத பொருளைப் பற்றி எண்ணி எண்ணி ஏனய்யா அவலமுறுகின்றாய்? கண்ணால், காதால், மூக்கால், உடம்பால், வாயால்