பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 109 வந்திருக்கின்றனவோ, அந்தந்த விதிக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பதே இவர்தம் வாதம்போலும்! * ஆகவே, விளைவை அடியொற்றிச் செய்யும் போது ஒருவன் நல்லது செய்கிறான் என்றோ, கெட்டது செய்கிறான் என்றோ, ஏன் அவனிடம் சண்டைக்குப் போகவேண்டும்? இயல்பு என்று இதைத்தானே உலகாயத வாதிகள் சொல்கிறார்கள்? அணுக்கூட்டங்கள் இயக்கத்தின்பாற் படும்போது அரசியல் எண்ணங்கள் தோன்றுகின்றன, ஆன்மிக எண்ணங்கள் தோன்றுகின்றன, பொருளாதார எண்ணங்கள் தோன்றுகின்றன. இதுதான் அந்த அணுச் சேர்க்கையின் இயல்பாகக் காண்பது. அந்தக் கருத்தை இங்கே அப்படி வைத்துப் பார்ப்போமே யானால், பெரியோர்கள் என்று சொல்லப்படுபவர் கள் யாருமில்லை. அவர்களுடைய செயல்கள், எண்ணங்கள் இவை என்று சொன்னால் அவை அவர்களுடைய இயல்பு, ஆகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்று கூறிவிடலாம். இந்தக் கருத்தைத்தான் லெனினும் பேசினார். டார்வின் எப்படி உயிர்கட்குக் கூர்தல் அறம் பேசினாரோ, அதுபோல மார்க்ஸ் இந்த ஜடப் பொருளினுடைய வளர்ச்சியை வற்புறுத்தினார். வளர்ச்சி என்பது மாறிமாறித் தோன்றுவதால், ஜடப் பொருள்கள் ஒருவகை வளர்ச்சியைப் பெறுகின்றன என்றனர் மார்க்சியவாதிகள். 19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் புரட்சி தோன்றியதென்றால், அதுவும் தேசிய உணர்வின் வளர்ச்சிதான் என்றனர். முதலாளித்துவம் பெருகினதென்றால் அதுவும்