பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அ.ச. ஞானசம்பந்தன் இதன்படிதான். இவை சமுதாய வளர்ச்சியின் இயல்பு என்ற அளவில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். பொருளுக்கு இயல்பான பண்போ, வடிவமோ ஒன்றும் கிடையாது. காண்பானுடைய காட்சியின் அளவை ஒட்டி அதற்கு வடிவம் ஏற்படுகிறது. இப்படி ஒரு பொருள் இருக்கின்றதே என்று என் கண்ணாகிய பொறி பார்த்து என் மனத்தில் பதிவு செய்தவுடன் ஒரு வெள்ளை நிறம் என் மனத்தை ஏற்றுக்கொண்டது என்று லாக்கே என்ற தத்துவஞானி சொன்னான். இதற்கு ஒரு வட்ட வடிவம் உண்டு என்று மனம் ஏற்றுக்கொண்டதாம். இப்படி வளைந்து கொடுக்கின்ற இயல்பும் இந்த வடிவம் உடையது என்றும் என்னுடைய மனம் ஏற்றுக்கொண்டதாம். ஆகவே, காண்பானுடைய மனத்தில்தான் இதற்கு ஒரு வடிவம் உண்டே தவிர, இதற்கென்று ஒன்றும் கிடையாது என்று பேசினான் லாக்கே. அங்கேதான் இந்த நாட்டின் சங்கரருடைய தத்துவம் தொடங்கு கிறது. இங்கே காணப்படுகின்ற பிரபஞ்சத்திற்கென்று ஒரு வடிவம் கிடையாது. வடிவம் இல்லாத பொருளுக்கு எப்படி வடிவம் இருக்கும் என்று கூறமுடியாமல் தொட்டுப் பார்க்கிறோம் என்று சொன்னால் அது அதனுடைய காட்சியளவாக இருக்கும். அந்த ரோஜாப் பூ இருக்கிறது. ரோஜாப் பூவைப் பார்த்தவுடனே காந்தியைப் போன்றவர்கள், "இந்த அழகான பூவினைக் காப்பாற்றுவதற்குக் கருணை வடிவமான கடவுள் முட்களை வைத்தானே" என்று நினைக்கின்றார். இதன் எதிராகக் "கடவுளே இல்லை; அப்படியே இருந்தாலும் அவன் அறிவற்ற வன். ஏனென்றால் இந்த அழகான பூவைப் பறிக்க