பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 113 ஏன்? ஜடப்பொருளுக்குரிய இயல்பு என்று சொல்லி விட்டால் நல்லது, கெட்டது, சிந்தனை, உணர்வு, உயர்வு, தாழ்வு எல்லாம் அதன் இயல்பாக ஏற்றி விடலாம். எனவே, கடவுள் முதலிய கற்பனை வேண்டா என்கின்றனர். இனி, இந்த அண்டம் முதல் அணுவரை உள்ள பொருள்களினுடைய இயக்கம் இருக்கின்றதே, இந்த இயக்கத்தில் ஒரு பொதுத்தன்மை இருக்கின்றது. ஒரு கோவையும் அழகும் ஒற்றுமைத்தன்மையும் உள்ளன. இதனை வெளியிடத் தகுந்த சொற்கள் இல்லை. நம்முடைய கருத்தை வெளியிடுவதற்குச் சொல் தகுதியுடைய கருவியே அன்று; அது சிறந்த தகுதியுடைய கருவியாக இருந்திருக்குமேயானால் இவ்வளவு நூல்கள் இந்த உலகிற்கு வேண்டியதில்லை. சட்டம் எழுதுகிறார்கள். சட்டத்தை அச்சடித்த காகிதங்கள் காய்வதற்குள் எத்தனை விதமான பொருள்களில் அச்சட்டங்கள் நீதி மன்றங்களில் பேசப்படுகின்றன! இத்தனை விதமான பொருள் களையும் இந்தச் சட்டத் துறையில் இருக்கின்றவன் சிந்திக்கிறான் என்றாலும் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்பச் சொற்களின் பொருள்கள் மாறுபட்டுக் கொண்டு போகின்றதாகவே தெரிகிறது. நாம் நினைக்கின்ற கருத்துகளை அப்படியே வாங்கித் தருகின்ற சக்தி அந்தச் சொற்களுக்குக் கிடையாது. அதிலும் சில சொற்களை நாம் பயன்படுத்தும்போது, நான் ஒரு கருத்தில் கூறுகிறேன்; கேட்கிறவர்களாகிய நீங்கள் ஒரு கருத்தில் அவைகளை வாங்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் வேறு கருத்தில் வாங்கிக் கொண்டீர்கள் என்று தெரிந்ததற்குப் பிறகு நான் என்ன செய்கிறேன்? வெவ்வேறு வழிகளில் என் கருத்தைப் புரிய வைக்க முயல்கிறேன். இப்படித்தான் இன்றைய நிலை உள்ளது.