பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அ.ச. ஞானசம்பந்தன் இல்லை. நார்த்ரோப் என்ற அறிஞரும் புத்த சமயத்திற்குத்தான் அதிக மரியாதை தருகின்றார். அடுத்த உலகம் என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்த மாதிரியெல்லாம் புத்தனிடத்தில் பேச்சே இல்லை என்று மிக அற்புதமாய் அச்சமயத்தை நார்த்ரோப் வியந்து பேசுகின்றார். மூலையிலே நின்றுகொண்டு வித்தைக்காரன் பேசுகிறான். எதுகை மோனையோடுகூடக் கடகட வென்று பேசுகிறான். அவ்வளவு பேரும் நின்று கேட்கின்றார்கள். ஆனால் என் மாதிரி பேசுகின்ற பொழுது ஒருத்தன்கூடக் கேட்கமாட்டேன் என்கின்றான். ஏன்? அவர்களுடைய எல்லையிலே நின்று அவனால் பேச முடிகின்றது. அந்த அளவை மீறும்பொழுது யாருக்கும் ஈடுபாடு ஏற்படுவதில்லை. அந்த நாட்டுக்காரன் எந்த அளவில் உணருகின் றானோ அந்த அளவில் புத்தன் நின்று பேசுகின்றான். 'மறு உலகம், பிற உலகம் என்றெல்லாம் பேசாத இந்தப் புத்த சமயத்தை ஏற்றுக் கொள்கின்றேன்' என்று பேசுகிறார், கிழக்கும் மேற்கும் என்ற சிறந்த நூலை எழுதிய அறிஞர் நார்த்ரோப். இனிப் புத்த சமயத்தின் அடிப்படையில் இருக்கின்றது தியானம், புத்தன் தியானம் (contemplation) என்று சொல்கிறானே அது என்ன என்று கேட்க விழைகிறோம். சர்க்கரை இனிக்கும் என்று சொல்லுகிறார்கள். 'ஏன் சார், இனிப்பு என்றால் என்ன? என்று கேட்டால், அது ஒரு ருசி என்றுதான் கூற முடியும். நாக்கில் போட்டால்தான் தெரியும். இந்தப் புத்தர் சொன்னாரே அக நோக்கு. இந்த அக நோக்கை அறிவின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், மற்றைச் சமயத்தார்