பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் அ.ச. ஞானசம்பந்தன் உலகாயதவாதி இரக்கம் இல்லாத நெஞ்சினனாய் இருப்பதில் தவறு காணவில்லை. இலங்கையில் வாழ்ந்த அரக்கர் அனைவரும் உலகாயதவாதிகள் என்று கம்பன் சொல்கிறான். அந்த உலகாயதவாதிகள் 'இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார் கள் என்றும் கம்பன் கூறுகிறான். 'எல்லாம் ஜடம்' என்று கருதினதால் இரக்கம் என்ற பொருளுக்கு மதிப்பே இல்லாது போயிற்று. எல்லாம் இறைவன் வாழுகின்ற இடம் என்று கருதினதால் இரக்கத்திற்கு ஆன்மிகத்தில் இடம் உண்டு. இனி, அடுத்ததொரு நிலை தியானம். புத்த தேவன் சொல்லியதிலிருந்து இந்து சமயம் சொன்ன வரையில், பிறருக்காக வாழுகின்ற இயல்பு ஆன்மிகத்தில் இருக்கிறதே தவிர உலகாயதத்தில் இல்லை. தான் கொண்ட கொள்கைக்காக, எதனையும், எவனையும் அழிக்கலாம் என்ற முடிவில் உலகாயத வாதிகள் போகிறார்கள். ஆன்மாக்கள் இறைவ னுடைய மறுபதிப்பு என்று நினைக்கின்றதனாலேயே - எல்லா உயிர்களிலேயும் இறைவன் இருக்கின்றான் என்று கருதுவதனாலேயே - பிறர் வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தியாகம் செய்கிறான் ஆன்மிகவாதி. - - ஒருவன் ஆட்டு மந்தையை ஒட்டிச் செல்கின்றான். புத்தர் இவ்வளவு ஆடுகளும் எங்கே போகின்றன என்று கேட்டார். பெரிய யாகம் ஒன்று நடக்கிறது; அதற்காகப் போகின்றன என்ற விடை கிடைத்தது. யாகத்தில் இவற்றை என்ன பண்ணு வார்கள் என்று கேட்கின்றார் புத்த தேவர். இவற்றைப் பலியிட்டு விடுவார்கள் என்ற விடை கிடைத்தது. இது பெருங் கொடுமை, இத்தனை ஆடுகளையும் கொன்று