பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 என்று தோன்றினார்? மூலப்பரம்பொருள் என்றும், இறைவன் என்றும் சொல்கிறோம். விநாயகன் என்ற சொல்லுக்கு 'வி - நாயகன் என்பது பொருள் ஆகும். தனக்கு மேல் யாரும் தலைவன் இல்லாதவன் என்று பொருள்படும். விநாயக வழிபாடு இன்றைக்குக் காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையில் பரந்து நிற்கின்ற ஒரு வழிபாடாகும். தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் விநாயக வழிபாடு என்று வந்தது என்று சொல்வதற்கு இல்லை. சங்க காலத்தில் விநாயகர் பற்றிய பேச்சே இல்லை. முருகனைப் பற்றிப் பாடல்கள் வருகின்றன. முருகன் சிவபெருமானுடைய மகன் என்று சங்கப் பாட்டுப். பேசுகிறது. ஆனால் விநாயகனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. பின்னர்க் காலாந்தரத்தில் ஏழாம் நூற்றாண்டில் தேவார காலத்தில் விநாயகனைப் பற்றிய பேச்சு வருகிறது. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பரவியிருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. இன்று, இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிரத்தில் விநாயகருக்குள்ள மதிப்பு வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. எல்லாவற்றிலும் விநாயக வழிபாடு மிக