பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தோன்றினார்? 141 முக்கியமாகக் கருதப்படுவது மகாராஷ்டிரத்தில்தான். பின்னர் மிகவும் பிற்காலத்தில் தோன்றிய ஆறு சமயங்கள் என்று சொல்லப்படுகின்ற தொகுப்பில் ‘காணாபத்தியம்’ என்ற பெயரில் விநாயகனை மூலப்பரம் பொருளாக வைத்து வழிபடுகின்ற ஒரு முறை தோன்றியிருக்கிறது. அதைப் போல “கெளமாரம்' என்று முருகனை மூலப்பொருளாக வழிபடுகின்ற முறையும் வந்தது. அப்படியே ஆறு தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அந்த அடிப்படையில் சமயங்கள் தோன்ற அவற்றை ஆறுவகைச் சமயங்கள் என்றும் சொல்லினர். இனி விநாயகனைப் பொறுத்தமட்டில் ஓங்கார வடிவினன் என்ற கருத்து இடைக் காலத்தில் பேசப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள ஒலியை "ப்ரிமார்டியல் செளன்ட்” என்று சொல்வார்கள். எல்லா ஒலிகளுக்கும் தாயாக உள்ள ஒலி ஓங்காரம் என்று சொல்வார்கள். ஒசை ஒலி யெல்லாம் ஆனாய் நீயே” என்று நாவுக்கரசர் சொல்வார். எனவே ஒலி வடிவாக முதல் தோற்றம் ஏற்பட்ட பொழுது அந்த ஒலி ஓங்கார வடிவைப் பெற்றிருந்தது என்று கருதுகிறார்கள். அந்த ஓங்காரத் திற்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டுமேயானால் அது விநாயகப் பெருமானின் உருவமாக அமைகிறது என்று நம்மவர் கருதுகிறார்கள். எனவே மிக மூலமாக, பழமையாக உள்ள ஒன்றைச் சுட்டுவதற்கு ஓங்கார வடிவத்தை விநாயகருக்குத் தந்திருக்கிறார்கள். இனி இந்த விநாயக வழிபாடு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தாலும் அந்தந்த நாட்டு மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு என்பனவற்றில் எவற்றை முக்கியமாகக் கருதுகிறார்