பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1
மந்திரங்கள் என்றால் என்ன?


மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக் கூட்டங்களாகும். ஒலிக் கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக 'நமச்சிவாய' என்ற ஒரு சக்திவாய்ந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால் அந்தச் சொல்லின் பொருளைச் சிந்திக்க வேண்டும். 'சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருளையுடையது நமச்சிவாய என்ற சொல். சாதாரண குழந்தைகூடப் புரிந்து கொள்ளக்கூடிய 'சிவனை வணங்குகிறேன் என்ற இரண்டு சொற்கள் எப்படி சக்தி வாய்ந்த மந்திரமாக மாறின என்பதை ஆழ்ந்து பார்க்க வேண்டும்.

நம்மைப் போன்ற மக்கள் பேசும்போது, நாம் பேசுகின்ற மொழி குறைமொழி என்று சொல்லப் பெறும். ஏன் குறைமொழி என்று சொல்லப்படுகின்றது என்றால் நம்முடைய மனத்திலுள்ள கருத்தை முழுவதுமாக வெளியிடுகின்ற ஆற்றல் பெற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச நம்மால் முடிவதில்லை. மிக சிரமப்பட்டு நல்ல சொற்களை எடுத்துக் கோத்து நம்முடைய கருத்தைத் தெரிவித்தால்