பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மகா மந்திரம் இன்றைக்கு 163 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தமிழகம் செய்த தவப்பயனாக ஒரு மாபெரும் சித்தர் இந்நாட்டில் தோன்றினார். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அல்லனோ என்று பிற்காலத்தில் அவரே தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்ளுகிறார் என்றால், ஏதோ புதிதாக இந்த நாட்டிலே திடீரென்று முளைத்தவர் என்று யாரும் தயவு செய்து நினைத்துவிடக் கூடாது. வாலாயமாகப் பழகி வருகிற இந்த நாட்டில் ஒரு மாபெரும் மரபில் தோன்றிய பெரியவர் அருட்பிரகாச வள்ளலார் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற இராமலிங்க வள்ளலார். சங்க காலத்திலே தோன்றி இவருடைய காலம் வரையில் இருந்த பெரியவர்களைப் பார்ப்போமே யர்னால் ஒரு ஏகாக்ரக சித்தத்தோடு ஒரு குறிக் கோளை நோக்கிச் செல்லுகின்ற சித்தர் பரம்பரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவர் இவர் என்பதை அறிய முடிகின்றது.