பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அ.ச. ஞானசம்பந்தன் யில் பார்க்கின்றோம். நல்ல காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறவர்கள் கூட இன்று இல்லாவிட்டால் நாளை செய்து கொள்ளலாம். இப்போது அதற்கு என்ன அவசரம்? என்று நினைந்து நாளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போவதைத் தான் காணுகின்றோம். வள்ளல் பெருமான் தம் குருவாக ஏற்றுக்கொண்ட திருஞானசம்பந்தப் பெருமான் சொல்லுவார், இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் என்று. இன்றைவிட நாளை நல்லது என்று நினைக்கின்ற இந்த மனோ நிலையை ஒதுக்கி, உடனடியாக குறிக்கோளை நோக்கிச் செல்லுக என அப்பெருமான் கட்டளையிட்டதை இங்கே வள்ளல் பெருமானும் பாடுகின்றார். நாளைஏகியே வணங்குதும் என நாளைக் கழிக்கின் றோம் என்று. மனித மனத்தைப் பார்த்துப் பேசுகின்றார். 'நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என நினைத்து, நினைத்து நாளைக் கழிக்கின்றாய் ஏழை நெஞ்சமே, இப்போது உன்னோடு வாழ வேண்டி யிருக்கிறதே என்கிற நிலையில் அந்தப் பாடல் அமைந்திருப்பதைக் காணுகின்றோம். இனி இப்பெருமகனாரின் வாழ்க்கையை, இந் நாட்டிலே இவருக்கு முன்னர் வாழ்ந்த மூவர் முதலிகளாகிய தேவார ஆசிரியன்மார்களும், திரு வாசகம் செய்த மாணிக்கவாசகரும் பெரும் அளவில் பாதித்திருக்கின்றார்கள் என்பதை திருமுறைகளைப் பார்க்கின்றவர்கள் அறிந்து கொள்ள முடியும்.