பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 155 முதல் திருமுறையிலிருந்து ஐந்தாம் திருமுறை முடிய மூவர் முதலிகளாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியவருடைய செல்வாக்கும் இவர்களைவிட அதிகமாக மணி வாசகப் பெருமானுடைய செல்வாக்கும் எந்த அளவிலே அவரைத் திருத்தி அமைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். சுந்தரர் தேவாரத்தில் ஒன்று சொல்லுவார். "பெருமானே இதற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடைய வரலாற்றைப் பார்த்தேன். மார்க்கண்டனுக்காக நீ மாபெரும் காரியத்தைச் செய்தாய். அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய்க் கின்றுன் வண்மைகண் டடியேன் எந்தை நீளனை நமன்தமர் நலியின் இவன்மற் றென்னடி யான்என விலக்கும் சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே என்று சொல்லுவார். இந்தப் பாடலிலே வள்ளல் பெருமான் மிகமிக ஈடுபட்டிருக்கிறார் என நினைக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பாடலிலே ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் திருக்கச்சூர் ஆலத்துார் என்ற இடத்திலே சுந்தரர் பசியால் வாடுகின்ற நேரத்தில் இறைவன் பிச்சையெடுத்துக் கொண்டுவந்து அவருக்கு உணவருத்தினான் என்று சுந்தரர் வரலாறு பேசுகின்றது. அந்த வரலாற்றிலே ஈடுபட்ட வள்ளல் பெருமான் இங்கே பாடுகிறார். அண்மை யாகும்கந் தரர்க் கன்று கச்சூர் ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த