பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 161 நிலைமாறி 24 மணிநேரமும் இந்த நினைவாக இருக்கும் போது அவரையும் அறியாமல் அந்தத் துறவு அவருள்ளே புகுகின்றது. இந்தத் துறவு மனப்பான்மை தான் வள்ளல் பெருமானை மாபெரும் சித்தராக மாற்றுவதற்குக் காரணமாக இருக்கின்றது என் பதனைப் பின்னே பார்க்கின்றோம். இனி இதுவரையிலே உருவவழிபாடு, அதற் குரிய சின்னங்களைப் பற்றிப் பெரிதாகப் பாடிய வள்ளல்பெருமான் 'நெஞ்சறிவுறுத்தல் என்ற பகுதி யிலே மற்றொருபடி மேலே செல்லுகிறார். அங்கே விக்கிரகம், அதற்குரிய அடையாளம், அதற்குரிய குறியீடுகள், அதனை வழிபட வேண்டிய முறை என்பனவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டு, இறைப்பொருளை தத்துவ ரீதியாக சிந்திக்கின்ற இயல்பைக் காணுகின்றோம். அதுவாய் அவளாய் அவனாய் அவையும் கதுவாது நின்ற கணிப்பாய் என வள்ளல்பெருமான் பேசுகின்ற பேச்சு சிவஞான போதத்தை நினைவுறுத்துகின்றது. - உலகத்தில் எத்தனையோ சமயங்கள் தோன்றி இறைப்பொருளுக்கு இலக்கணம் சொல்ல வந்தன. ஆண்டவனைத் தந்தை என்று சொல்லும்போது பெண்மையிலிருந்து விடுபட்டவனாகிவிடுகிறான். தாய் என்று சொல்லும்போது ஆண்மையிலிருந்து விடுபட்டவனாகிவிடுகிறான். இந்த அடிப்படையை யெல்லாம் மனத்திலே கொண்ட தமிழர்கள் அற்புதமாகப் பாடினார்கள். அவன் அவள் அது