பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ல் அ.ச. ஞானசம்பந்தன் முதலில் விக்கிரக வழிபாட்டிலே ஈடுபட்டு இறைவனை உறுப்பு உறுப்பாக வருணித்து, திருத்தணிகை மலை வாரேனோ, சாமி உன் அழகைப் பாரேனோ என்றெல்லாம் பாடியவர் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு தத்துவ உலகத்திலே புகுகின்றார். உலகநிலை முழுதாகி ஆங்காங்குள்ள உயிர் ஆகி என்று வரிசையாக இலக்கணம் சொல்லிக் கொண்டே போகிறார். அதைப் பார்ப்போமேயானால் அந்த வளர்ச்சியில் ஏறத்தாழ நடுப் பகுதிக்கு வள்ளல் பெருமான் வந்துவிட்டார் என்பதை நாம் அறிய முடிகின்றது. தத்துவரீதியாக இறைவனைப்பற்றி மகாதேவ மாலையிலும், நெஞ்சறிவுறுத்தலிலும் இவ்வளவு விரிவாகப் பேசிய பிறகு மனித மனத்திற்கு ஒரு சிறு வளர்ச்சி ஏற்படத்தான் செய்யும். இவ்வளவு அரிய பொருள் இறப்ப இழிந்த நமக்கு நமக்கு அருள் செய்ததே என்றால் அதில் வியப்பு ஒன்றுமில்லை. பெரியவர்களாகிய இவர்கள், தம் பாடல்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நமக்குப் பயன்படும் முறையில் வாழ்ந்து காட்டியவர் கள். ஆகையால் நம்மைப் போன்ற சாதாரணமானவர் களுக்கு வருகின்ற ஐயங்களை தாங்களும் ஏறிட்டுக் கொண்டு அற்புதமாக அமைதி பாடுவார்கள். மனித மனம் இவ்வளவு உயர்ந்த பொருள் நமக்குக் கிட்டக் கூடியதா என்று ஐயுற்றுத் தளர்கின்ற நேரத்தில் கவலையே வேண்டா. எவ்வளவு தவறுகள் இழைத்திருந்தாலும் சரி, குன்றே அனைய குற்றங்கள் செய்திருந்தாலும் அவன் அருள்வான் என்று பாடு வார்கள் மணிவாசகப் பெருந்தகை. ஆகவே மலை