பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 167 போன்ற குற்றங்களைச் செய்தாலும் தவறில்லை. ஆனால், வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே என்று சொல்லுவார். பெருமானே என்ன்ைவிடுதி கண்டாய்' என்று இறைஞ்சுவார். ஆகவே மாணிக்கவாசகரது திருவாசகத்தில் எல்லையில்லாது ஈடுபட்டவராகிய வள்ளல் பெருமான் அந்தக் கருத்துக்களை அப்படியே இங்கே வாங்கிப் பேசுகிறார். பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டிடேல் ஏன் ? எனக்கு வேண்டியவன் நீ. நீ என்னை வெறுத்தாலும், எனக்கு வேறிடம் இல்லை. நான் எவ்வளவுபெரிய குற்றங்கள் செய்தாலும் அந்தக் குற்றங்களைப் பொறுக்கமாட்டாது ஒறுத்தாலும் எனக்கு வேறு வழியே இல்லை ஐயா உன்னை விட்டால். என்னுடையவன்நீ வெறுத்தாலும் வேறிலை வேறோர் இடத்தை விரும்பி என்னை அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்குன் அருளிடமே என்று சொல்லி, குற்றங்களைப் பொறுத்து அருள் புரியக்கூடிய பேராற்றல் படைத்தவன் இறைவன் என்ற பேருண்மையை எடுத்து விளக்கும்போது அவருடைய வளர்ச்சியையும் நாம் அதிலே காண முடிகின்றது. அப்படியானால் இயல்பாக ஒரு ஐயம் தோன்றும். உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. இறைவன் இருக்கிறான். அப்படி இருக்க இந்த இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன தொடர்பு?