பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ல் அ.ச. ஞானசம்பந்தன் மரபு இந்த நாட்டிலே இருந்து வருவதைப் பழங்காலம் முதல் காணுகின்றோம். திருநாவுக்கரசர்பெருமான் சொல்லுவார். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் என்று பேசுவார். அனுபவம் மிகுந்த பெரியவராகிய அவர் தன்னுடைய குறைபாட்டை நன்கு அறிந்திருந்த காரணத்தினாலே தன்னுடைய மனத்திலே இறைவ னுடைய திருவடி தங்கியிருக்க வேண்டிய பொறுப்பு இறைவனுடையது என்று பேசுகிறார். அந்தத் திருவடியை எப்போதும் மனத்தில் தரித்திருக்க வேண்டுமென்றால் பொறுப்பு இவருடையதாகிவிடும். அதற்காக அந்தப் பெரியவர் பேசுகிறார். 'உன் திருவடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும், அப்படி இருக்கும்படியான காரியத்தை நீ செய்தல் வேண்டும் என்று பேசுகிறாரே - அந்தக் கருத்து வரிசையாகத் தொடர்ந்து வருவதைக் காணுகின்றோம். கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய் என்று பேசுவார் மணிவாசகப் பெருந்தகை. ஆகவே என்னை விட்டுவிடாதே என்று பேசுகின்ற கருத்து மனிதனுடைய மனத்தின் குறைபாட்டை நினைந்து சொல்வதாகும். இங்கே வள்ளல்பெருமான் பேசுவார், எனக்கு உன் அருளிடமேயாதலால், நன்றினிக் கைவிட்டிடேல் என, இந்த உலகத்தில் உள்ளவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் ஐயா. ஏதோ திருவருள் பெற்று விட்டேன் என்று பீற்றிக் கொண்டாயே, எங்கே அந்தத் திருவருள் என்று சிரிப்பார்களே. அப்படியானால்