பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அ.ச. ஞானசம்பந்தன் பெரியவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே ஏறிட்டுக் கொண்டு சொல்கிறார்கள். 'பெருமானே, நீ கருணைபாலித்தாய். ஆனால் நான் அதனுடைய அருமைப்பாட்டை அறியாமல், அதனுடைய சிறப்பை அறியாமல், அதனுடைய பெருமையை அறியாமல் கைநழுவ விட்டுவிட்டேன் என்று வருந்துகின்ற வருத்தத்தை மணிவாசகப் பெருமான் பேசுவார். சின்னக் குழந்தையினுடைய (மழலை கையிலே பொற்கிண்ணத்தைக் கொடுத்தால் பொற்கிண்ணத்தின் சிறப்பை அறியாத அந்தக் குழந்தை அந்தக் கிண்ணத்திலே மண்ணை மண்ணை வாரும். கல்லிலே அதைப் போட்டுத் தட்டி ஒலி கேட்க முயலும் முயற்சியில் இன்பத்தை அடையுமே தவிர பொற்கிண்ணத்தினுடைய மதிப்பை அது அறியப் போவதில்லை. அதுபோல - மழலைக்கை கிண்ணம் போல உன்னை அருமைப்பாடுடையவன், கிடைத்தற் கரியவன் என்று நினைக்காமல் எளிமையாகக் கருதி விட்டேன் என்று பேசுகிறார். அந்தக் கருத்து மிகமிக ஆழமானது. மனித மனத்தின் குறைபாட்டை நன்கு அறிந்து பேசப்படுவது. ஆதலால் அதனையே வள்ளல் பெருமான் இங்கே பேசுகிறார். அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன் நீ இரவிலே வந்து, கதவைத் தட்டி 'மகனே இந்தா பிடி' என்று கொடுத்தாயே, அதனுடைய அருமைப் பாட்டை அறியேன். அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே மகிழ்ந்தளித்த பெருங்கருணை 'நான் வேண்டா என்று கூறினேன். ஐயா என்ன கொடுமை இது? ஐயா நீ யார்? உன் திருவருள்