பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் ( 175 எத்தகையது? அதை நீயாகத் தேடிக் கொண்டு வந்து, கதவைத் தட்டிக் கொடுத்தபோதும் அதனுடைய அருமைப்பாட்டை அறியாமல் வேண்டா என்று சொல்லிவிட்டேன். வேறு யாராக இருந்தாலும், வலிய வந்து கொடுத்து நான் அதனை ஏற்றுக் கொள்ளாத போது என்மாட்டுச் சினங்கொண்டு போயிருப்பார் கள. ஆனால, அருளுடையாய் அருளே வடிவமாக இருக்கின்ற பெருமானே, நீ வேண்டா என்று நான் ஒதுக்கிய பிழைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு, மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம் என்று பேசும்போது எவ்வளவு பெரிய தத்துவத்தைப் போகின்ற போக்கிலே இந்தச் சித்தர் பேசுகின்றார் என்பதை அறிய முடிகின்றது. முதல் திருமுறையிலிருந்து ஆறாந் திருமுறை வரை வளர்கின்ற வளர்ச்சியை ஒரு பிறப்பிலே பெற்றவர்தாம். என்றாலும் தமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்களுடைய வாழ்க்கை தங்களுக்குப் பெரிய துணையாக - கலங்கரை விளக்காக - வழிகாட்டியாக அமைந்திருப் பதை இவர்கள் மறுப்பதே இல்லை. ஒதாது உணர்ந்தவரும், அம்மையின் ஞானப் பாலை உண்டவருமாகிய திருஞானசம்பந்தப் பெருமானைக் குருவாக ஏற்றுக்கொண்டு பேசுகிறார். உயிர்அனு பவம்.உற் றிடில் அதனிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச் செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்.உறும் என்றாய்.