பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அ.ச. ஞானசம்பந்தன் மாயை, கன்மம் அனைத்தும் நீங்க என்ன இருந்தது என்றால் சர்க்கரையிலே மிளகாய் மிட்டாய் பண்ணினாலும் அது இனிப்பாகவே இருப்பதுபோல 'அன்பே முழுவடிவமாக ஆகிவிட்டார் கண்ணப்பர் என்று சொல்லுகிறாரே, அந்த இலக்கணத்தை வாங்கி அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ என்று சொல்லி ஐந்தாம் திருமுறையை முடிக்கிறார். அடுத்து அவர் ஆறாந் திருமுறையில் துழைகின்ற காலத்தில் வள்ளல்பெருமான் இதுவரையில் இருந்த ராமலிங்க வள்ளலாராக இல்லாமல் திருஅருட் பிரகாச வள்ளலாராக மாறுகின்ற பெரும் பேற்றைக் காணுகின்றோம். ஆறாம் திருமுறையைத் தொடங்கும் போதே அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே என்று பேசும்போது இதுவரையிலே பெரிய தத்துவங் களை எல்லாம் பேசிவந்த அவர், யோகம், தியானம் முதலானவற்றையெல்லாம் பேசிவந்த அவர் அவை அனைத்தையும்விட்டுவிட்டு ஒரேயடியாக அன்பு மார்க்கத்தைக் கடைப்பிடிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையிலே வந்த மிகப்பெரிய திருப்பமாகும். பின்பு சுத்த சமரச