பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 179 சன்மார்க்க சங்கம் வைப்பதற்கும் உலகத்திலுள்ள எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு பொதுத் தன்மையோடு சமய வழிபாட்டை நிறுவ வேண்டுமென்ற அவருடைய எண்ணத்திற்கும் விதையாக அமைந்தது இந்தக் கருத்துத்தான். அன்பு ஒன்றுதான் இறைவனை அடைவதற் குரிய வழி. அன்பே வடிவாக இருக்கிறான் இறைவன் என்பதை எந்த வினாடி உணர்ந்தாரோ அதிலிருந்து அவருடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டதைக் காணுகின்றோம். அதனைத்தான் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே ‘நிர்க்குண், நிராமய, நிராலய என்று சொல்லிக் கொண்டிருந்தது போக அன்பெனும் பிடிக்குள் அகப்படுகின்ற மலையாகக் காணுகின்ற காட்சி அன்பு எனும் குடிலுக்குள் புகுகின்ற சாதாரண இறைவனாகக் காணுகின்ற காட்சி, அன்பெனும் வலைக்குள் படுகின்ற பரம்பொருளாகக் கூறுகின்ற காட்சி, அன்பெனும் கரத்துள் அம்ருதமாகக் காணுகின்ற காட்சி - இந்த நிலை வந்த பிறகு அவருடைய வாழ்க்கை முற்றுமாக மாறிவிடுகிறது. இனி இந்த அன்பின் அடிப்படையில் நின்று உலகத்தைக் காணுகின்றார் வள்ளல்பெருமான். முதலில் திருநீறு இடாதவர்களைக் காணக் கூடாது என்று பேசியவர், உருவ வழிபாட்டிலே சிவ பெருமானையும், முருகப்பெருமானையும் விரிவாகப் பேசியவர், அந்த நிலையில் இருந்து மாறி, இப்போது அன்பு என்ற கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கும்போது எத்தகைய வேறுபாட்டையும் அவரால் காண முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இறைவனை வழிபடுகின்ற அனைவருமே