பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 8 183 என இப்படி அருகர், புத்தர் முதலான பேர்களும் அவனுக்குண்டு என்று பேசும்போதுதான் அவர் உலகமனைத்தையும் ஒன்றாகக் காணுகின்ற பரந்துபட்ட நிலையைக் காண முடிகின்றது. இனி அதற்கடுத்த பாட்டிலே ஒரு வினாவை அவரே எழுப்பிக் கொள்கிறார். சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் அருகர், புத்தர் என்ற பெயர்கள் எல்லாம் புறச் சமயத்தார்கள் பேர் அல்லவா? அவை எல்லாம் உன் கணவர் பேர் என்று சொல்லுவது பொருத்தமா என்ற தோழி கேட்கின்றாள் என்று சொல்லி பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் என்கிறார். 'பிறசமயத்தார்' என்று சொல்லும்போது பெளத்தம், சமணம் போன்ற பழைய சமயங்கள் மட்டுமல்ல. பிற்காலத்தில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சமயங்களையும் ஒன்றாக ஆக்கிக் கொண்டு பித்தர்என்றே பெயர்படைத்தார்க்கு எப்பெயர்ஒவ் வாதோ ‘என்னுடைய கணவனைப் பித்தர் என்று நாங்கள் சொல்கிறோம் என்றால் எந்தப் பெயரைச் சொன்னால் என்ன என்று சொல்லி, உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற பெருங் காட்சியைக் காணுகின்றோம். தொல்காப்பியர் தொடங்கினாரே ஓரறிவு உடைய உயிரே என்பதில் தொடங்கி, உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் தொடர்புடையன என்ற அந்தக் கருத்தை வள்ளல்பெருமான் தம் ஆறாம் திருமுறையில்