பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 27

 “ஏதோ ஒரு பெரிய அபிஷேகம் பண்ணி விட்டதாலே பழனியிலே போய் எல்லாவற்றையும் - ஒரு வருஷக் கணக்கையும் கழித்துவிடலாம் என்று நினைக்கலாம். பாசவதைப் பரணிக்காரர் என்ற ஒரு பெரியவர் பாடுகிறார். நூறு குடம் பால் அபிஷேகம் பண்ணிட்டா 365 நாளும் பண்ணின பாவத்தைப் போக்கிவிடலாம் என்று நினைக்காதே, என்பாவம்' என்று கேட்கிறார்.

ஆறு, கடல் ஏழு இருந்தும்

சப்த கடலில் இருந்தும் தீர்த்தத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கிறான். சங்கல்ப ஸ்தோத்திரத்தில் சொன்ன அத்தனை ஆறுகளில் இருந்தும் தீர்த்தத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கிறான். அவர் கேட்கிறார்.

என்பாவம் ஆறுகடல் ஏழிருந்தும்

அம்பாள் இதனை விரும்பவில்லை.

என் அன்னை அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம்

அம்பாள் சொல்கிறாள் 'மகனே நான் படைத்த தண்ணியடா. இது. இதையே எடுத்து எனக்கு அபிஷேகம் பண்ணாதே. நீயாகப் படைத்தது எதாக இருந்தாலும் அதை எடுத்து அபிஷேகம் பண்ணு. கேவலம் மனிதன் எதைப் படைக்க முடியும்? அம்பாள் சொல்கிறாள்.

அன்பாளர் கண்ணருவி

அவர்களது கண்களில் இருந்து வருகிறதே உப்புத் தண்ணிர் - இரண்டு சொட்டு அதற்குத்தான் அம்மை