பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 29


சிட்டரோது வேதமும் சிறந்தஆக மங்களும் வழிகாட்டுவதற்காக வந்த கைகாட்டிகள். இவன் என்ன பண்ண ஆரம்பித்து விட்டான்?

திருமுறை பூஜை என்பான், ஞானசம்பந்தர் தேவாரம் ஆகிய முதலாம் திருமுறையிலிருந்து சேக்கிழாருடைய பன்னிரண்டாந் திருமுறை வரையிலே - சத்தியமா ஒருமுறை கூடத் திறந்து பார்த்திருக்கமாட்டான் - அழகாக அடுக்கி வைத்து - நம் போல்வார் திறந்து பார்த்து விடுவாரோ என்பதற்காகக் கண்ணாடி போட்டுப் பூட்டி சீல் வைத்து பூஜை செய்வான், ஊதுவத்தியைக் கொளுத்தி வச்சு.

பாரதி காலத்திலேயும் நடந்திருக்கிறது.

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம்இவள் பூசனை யன்றாம்

என மனம் நொந்து பாடுவார் அந்தக் கவிஞர் பிரான்.

ஆக திருமுறை பூஜை செய்வது - திருமுறை களைப் படித்துப் பயன்கொள்வது என அர்த்தம். தினமும் அதைப் படிக்கவேண்டும் என்று அர்த்தம். இதை உணராது தவறு நடந்தபோது சித்தர்கள் கண்டிக்கிறார்கள்.

‘வாழ்க்கை வழிகாட்டியாக வந்த நூல்களை அதுவே வழியென்று நினைத்துவிட்டாயே, மகனே

கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்