பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 33


மறந்துவிட்டு, அதை சம்பிரதாயமாக்கிவிட்டான். இந்த நிலையைத்தான் சித்தர்கள் பாடுகிறார்கள்.

காலைமாலை நீரிலே மூழ்கு,மந்த மூடர்காள்

நீரிலே மூழ்குவது எதற்கு என்று தெரியாததனாலே அவனை மூடன் என்று திட்டினார். சொன்னாலும் தெரிந்துகொள்ளவில்லை. அவனை மந்த மூடர் என்றார்.

காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் ?

ஏனப்பா, நீ இரண்டு வேளை மூழ்கினதற்கு இத்தனை பலன் என்று எதிர்பார்க்கிறாயே, இருபத்துநாலு மணி நேரமும் அந்தத் தேரை நீருக்குள்ளேயே கிடக்கிறது. அதற்கு ஏதாவது பயன் உண்டா?

நாலு வேதங்களையும் விடாமல் ஒதுகிறான். ஒதுகிறவன் பொருள் தெரிந்து ஒதுகிறானா, இல்லை. ஏதோ அது ஒரு கடன், ஒரு தொழில் என்ற முறையிலே.

அதுபோல விபூதி இடுகிறவனும் உடம்பு, தலை கால் என்று விலை குறைவாகக் கிடைக்கிறது. என்பதற்காகப் பூசித் தள்ளிவிடுகிறான். ஓயாமல்.ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கிறான். கேட்டால் ஆண்டவன் நாமத்தைப் பஜித்துக்கொண்டே இருக்கிறேன் என்கிறான். சொல்லுகிறானே அவனது உதட்டுக்கும், மனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்கிறதா என்றால், கிடையாது. வெறுமனே சொல்வதற்கு பயன் உண்டென்றால் உலகத்திலே உள்ள டேப்ரெக்கார்டர்கள் எல்லாம் மோட்சம் போயிருக்க வேண்டும். இந்தத் தமிழ் நாட்டுப் பெரியவர்கள் சொன்னார்கள். நாலு வேதத்தை