பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தர்கள் 47


காரணம் இயற்கையென்று நீங்கள் எதையோ மனதில் நினைத்துக் கொண்டு அது உங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டதென்று நினைக்கிறீர்கள். அவர்கள் அப்படி நினைப்பதில்லை. இயற்கையே அவர்கள், அதுதான் அவர்களுக்கும் நமக்குமுள்ள வித்யாசம். நாம் இயற்கையில் இருந்து நம்மை பிரித்துக் கொண்டோம். அதுதான் உலகத்திலே இருக்கின்ற பிரச்சினை எல்லாம். இந்தச் சித்தர்கள் இயற்கையே தாங்களாக மாறிவிட்டார்கள். ஆகவே அவர்கள் அதை அடக்குவதும், விருப்பம்போல செய்யச் செய்வதும் சாதாரணமான சமாசாரம். இதை விளங்கிக் கொள்வோமேயானால் சித்தர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்துவிடுவோம் என்று பாடுவார் பாம்பாட்டி. மேல் மருவத்துாரில் நடந்தது இது.

வேதன்செய்த சிருட்டிகள்போல் வேறு செய்குவோம் வேதனையு மெங்கள்கீழே மேவச் செய்குவோம்.

வேதன் - பிரம்மா.

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்.

நாதன் - பரம்பொருள். பரம்பொருள் வேறு, தாங்கள் வேறு என்ற சூழ்நிலை இல்லாதவர்களாதலாலே

சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

இதற்கும் மேலே கூடுவிட்டுக் கூடு பாயும் வல்லபம்' என்று கூறுவார். பரகாயப் பிரவேசம் என்பது இன்று