பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 49

 அதை வாங்கிக் கொள்வோமேயானால் சாவா மூவாப் பெருவாழ்வு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த உடம்பு ஏன் எடுக்கிறார்கள்? அன்றைய தேவைக்கு எந்த உடம்பு தேவையோ அந்த உடம்பை மேற்கொள்கிறார்கள். ஒருவருக்கு நலம் செய்ய வேண்டும். அதை இந்த உடம்போடுதான் என்றால் செய்கிறார்கள். அந்த உடம்பு வேண்டா என்றபோது மற்றொரு உடம்பை எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே குறிப்பிட்ட ஒரு உடம்போடுதான் இருக்க வேண்டுமென்ற பிரச்சினை இல்லவே இல்லை. அதுதான் சித்தர்களுடைய வாழ்க்கையிலே நாம் காணுகின்ற ஒன்று. ஆக பரகாயப் பிரவேசம் செய்கின்ற பேராற்றல் உடையவர்கள். எந்த நேரத்திலும், எந்த உடம்பிலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம் என்பதை அறிந்து கொள்வோமேயானால் - கண்டின்யுடி என்று சொல்கிறோமே - அவர்களைப் பொறுத்தமட்டில் - இடையீடு இல்லாமல் விடுபாடு இல்லாமல் இருந்து வருகிற வாய்ப்புக் கிடைக்கிறது. ஆக சித்தர்கள் என்றும் உள்ளவர்கள். திருமூலரில் தொடங்கி இன்றைய வரையிலே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியவர்கள் என்று யாரும் நினைந்துவிட வேண்டாம். எல்லா நாட்டிலும் இருக்கின்றார்கள்.

நம்முடைய நாட்டைப் பொறுத்தமட்டிலே இடைக்காலத்திலே இவர்களுடைய பெயர்களிலே பல பாடல்கள் தோன்றின. இடைச்செருகல் முதலான கோளாறுகளும் வந்தன. இவர்களைப் பொறுத்த மட்டிலே பரம்பொருளுக்கு மக்களைக் கொண்டு செலுத்துவதைக் காட்டிலும் சமுதாயத்திலே மக்களை செம்மையான முறையிலே வாழ வைப்பதே மேல் என்று நினைத்தார்கள். அந்த அடிப்படையிலே சாதி