பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 அ.ச. ஞானசம்பந்தன்


சமயத்தைச் சாடினார்கள். தேவையில்லாத சடங்கு களைச் சாடினார்கள்.

சித்தர்களுடைய கோயில், ஆனதாலே இஸ்லாமியர் பூஜை பண்ணுகிறார். கிறிஸ்துவர் பூஜை பண்ணுகிறார். அரிசனர் பூஜை பண்ணுகிறார் மேல் மருவத்துர்க் கோயிலிலே. ஆக சித்தர்களுடைய கோயில் என்றால் அங்கே சாதி சமயத்திற்கு இடம் கிடையாது. சமயமே இல்லை என்றால் அங்கே மனித குலம் முழுவதுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

செயற்கரிய செயல் என்பது ரொம்ப சர்வ சாதாரணமான சமாசாரம் சித்தர்களைப் பொறுத்த மட்டில். ஆகவே அதையும் செய்கிறார்கள்.

இனி சித்துக்கள் என்று சொல்கிறோமே, இந்தச் சித்துக்களைத் தேவையில்லாமல் ஆடம்பரத்துக் காகச் செய்வது சித்தர்களுடைய வேலை அன்று.

எங்கே எப்பொழுது தேவைப்படுகிறதோ அங்கே அப்பொழுது பயன்படுத்துவார்கள். அது மட்டுமல்ல. அதற்கு அதிக மதிப்பு வைக்காதே என்றும் சொல்லுவார்கள். அதுவும் மருவத்தூர் போன்ற இடங்களிலே நேரடியாகக் காண முடியும். 'சித்துக்களைச் செய்ததனாலே சித்தர்கள் அல்ல. சித்தி அடைந்ததனாலே சித்தர்கள் என்று சொல்கிறோம். இவர்களுடைய பாடல்களை ஆழ்ந்து பார்ப்போமேயானால் நம்முடைய சமுதாயத்தை, வாழ்வை, இந்த உலகத்திலே சிறந்த முறையில் அமைத்து மறு உலகத்தையும் பெறக்கூடிய வாய்ப்பை அளிக்கின்றன என்பதை நினைக்கும்போது தமிழர்களுக்கு சித்தர்கள் செய்த பேருபகாரம் என்றும் மறக்க முடியாதது என்பதை அறிய முடிகிறது.