பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 அ.ச. ஞானசம்பந்தள்


திசையை நினைத்துப் பேசினான் என்பது ஆய்தற்பாலது. ஒருவேளை நம்மைவிட மேற்கே உள்ளவர்களை நினைந்து பேசினானோ என்று எண்ண வேண்டியுள்ளது. இது பற்றிப் பேசிய, எழுதிய பல ஆசிரியர்கள் கற்பனையால் ஒரு பிரிவினைச் செய்து கொண்டார்கள்.

இரஷ்ய நாட்டவரைக் கீழ்நாட்டவர் என்று மேலைநாட்டவர் கூறுவதனை நீங்கள் அறிவீர்கள். "கீழை நாட்டவரின் பொதுவுடைமை மனப்பாங்கை நம்மால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியவில்லை', (“We can never understand eastern communistic mind”) என்று மேலை நாட்டவர் கூறுவர். ஐரோப்பாவோடு சேர்ந்து நிற்கும் இரஷ்யரை நம்மோடு சேர்த்துக் கீழைநாட்டவர் என்றால், மேலைநாட்டவர்தாம் யார்? ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் வாழ்பவரும் அமெரிக்கரும் தாம் போலும். திசை கூறி ஒன்றை அறுதியிட்டுக் காட்டவோ வேறுபடுத்திப் பார்க்கவோ இடமில்லை என்பது நன்கு விளங்கும். எனினும், ஒன்றுமட்டும் உறுதி. ஐரோப்பாவின் மேற்குப்பகுதி யிலும் அமெரிக்காவிலும் தோன்றி வளர்ந்த நாகரிகத்திற்கும், ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலும் ஜப்பான் முடிய உள்ள நாடுகளிலும் தோன்றி வளர்ந்த நாகரிகத்திற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. அந்த அடிப்படையான வேறுபாட்டைத் தத்துவ மேதைகளும், ஏனைய சமயத்துறை நின்றாரும், பண்பாட்டாராய்ச்சியாளரும், மானிடவியல் ஆராய்ச்சி வல்லுநரும் தனித்தனியே தத்தம் நிலையில் ஆய்ந்து கண்டறிந்து, இவைகட்கிடையே வேறுபாடுகள்