பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 57

 வேற்றுமை இருந்து வருகிறது. லண்டன் நகரத்தில் லண்டன் விமான நிலையத்தில் நாம் இறங்கியவுடன், "நீங்கள் இந்தியர், எனவே உள்நாட்டவர் வெளியேறும் இந்த வாயிற்படி வழியாகச் செல்லலாம்" என்கின்றனர். ஏழாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து செல்லும் நமக்கு ஒரு வழி. 22 மைல் தொலைவில் உள்ள பிரெஞ்சு நாட்டிலிருந்து வருபவருக்கு அந்நிய நாட்டார் வெளியேறும் வேறு ஒரு வாயில். ஏனென்றால், அவர் வெளிநாட்டவராம். 7000 மைலுக்கு அப்பாலிருந்து செல்லும் நாம் காமென் வெல்த் உறவாளர்கள். 22 மைல் தொலைவில் உள்ள பிரெஞ்சுக்காரர். இங்கிலாந்து நாட்டவருக்கு வெளிநாட்டாராம். இங்கிலாந்து நாட்டையே எடுத்துக் கொண்டாலும் பழைய அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையிலே வரும் ரோமன் கத்தோலிக்க மதத்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வேறு. அதிலிருந்து பிரிந்து, மக்கள் மனநிலை மாறுபாட்டிற்கு ஏற்ப மதமானது வளைந்து கொடுத்து மாறுபட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட புராட்டஸ்டண்ட் மதத்தவர் இருக்கிறார்களே, அவர்கள் வேறு.

புத்த தேவன் ஒருவன்தான். அவன் நிருமாணித்த மதமும் ஒன்றுதான். கருணையே உருவாகிய புத்த தேவன் உருவாக்கிய புத்தமதம் மகாயானம், ஹீனயானம் என்று இரண்டாகப் பிரிந்து குடுமிபிடிச் சண்டையில் நிற்கும் நிலையைக் காணலாம். இன்னும் கொஞ்சம் மேற்கே போனால் அமெரிக்க நாட்டில் டெட்ராய்டு பகுதி மக்கள் "டெக்சாஸ் பகுதி மக்கள் பேசுவது ஆங்கிலமே இல்லை என்று கூறும் நிலையைக் காணலாம்.