பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 59


இரண்டுக்குமிடையே ஒற்றுமையே இல்லையா? இருக்கத்தான் செய்கின்றது. அதை மறுப்பதற்கில்லை.

புத்த தேவனுடைய அடிச்சுவட்டைப் பின் பற்றும் ஜப்பான் நாடு இன்று அவனுக்கு நேர் எதிரான முன்னேற்றம் பெற்றிருக்கிறது. புத்த சமயம் என்பது தியானத்தை (contemplation) அடிப்படையாக கொண்டது. அவன் கொள்கைப்படி ஒன்றைப் பார்த்து 'இது நல்லது, இது தீயது' என்று பேசுவதுகூடச் சரியில்லை. உலகத்தில் நல்லது என்றோ கெட்டது என்றோ தனியே ஒன்றும் கிடையாது; உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கிடையாது. உலகப் பொருள்களின் இலக்கணத்தை ஆய்ந்தால் எது நல்லது எது தீயது என்று கூற முடியாது. இந்த நாற்காலி சிவப்பாகத்தான் இருக்கும். நாம் ஏன் அது பச்சையாக இல்லையே என்று மனம் வருந்த வேண்டும்? அவ்வாறு வருந்தினால் அது அறியாமையின்பாற்படும். நாற்காலியின் நிறம் சிவப்புத்தான். ஆகவே, அறிவுடையவன் நாற்காலி பச்சையாக இல்லையே என்று கவலைப்பட மாட்டான். இருப்பதனை அப்படியே ஏற்றுக் கொள்வான். இப்படி இருந்திருக்க வேண்டும் என நினைப்பதே இல்லை. இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த மனோபாவம் கொண்டவர் புத்த தேவர். அத்தகைய மனோபாவம் கொண்ட தேவனின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகச் சொல்லும் ஜப்பானியர் இன்றைக்கு மேலை நாட்டவரின் பழக்க வழக்கங்களில் புகுந்து துளையமாடுகின்றனர். ஆக, வேற்றுமை வேற்றுமை என்று எங்கே பார்த்தாலும் வேற்றுமையையே காண்கிறோமே; இந்த வேற்றுமை