பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 67 மேலைநாட்டாரின் சமய வாழ்க்கை, வாழ்க்கைமுறை, கல்விக்கொள்கை, அடிப்படையான இயல்பு ஆகிய எல்லாமே இந்த வேறுபாட்டின் அடிப்படையாக அமைந்துவிட்டன. மிகப் பழைய காலத்திலேயே பிளாட்டோவும், அரிட்ஸ்டாடிலும் போட்ட விதை அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய ஒரு வழக்கத்தைக் கொண்டு வந்து விட்டது. அதை எடுத்தாலும் அறிவின் துணைகொண்டு ஆயத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், கீழை நாடுகளான இந்தியாவில் தோன்றிய இந்து, சமண, பெளத்த சமயங்கள், சீனாவில் தோன்றிய கன்பூசியனிசம், அதற்கு அப்பால் தோன்றிய டோயிசம், அதற்கும் அப்பால் ஜப்பானில் தோன்றிய சிண்ட்டோயிசம் ஆகிய அனைத்தும் ஒரே அடிப்படையைக் கொண் டிலங்குவதனைக் காணலாம். ஜப்பான் எங்கே உள்ளது, நாம் எங்கே உள்ளோம்! இந்தக் காலத்தில் காணப்படுவதுபோல் அக்காலத்துப் போக்குவரவு வசதியில்லை; என்றாலும், இவற்றிற்கிடையே அடிப்படை ஒற்றுமையைக் காண முடிகின்றது. மேலை நாட்டாரைப் பொறுத்தமட்டில் இன்று இயேசு நாதருடைய கிறித்தவ சமயத்தர் அதற்கு முன்பு பல தெய்வ வணக்கமும் உடையவர்களாக இருந்தனர். அக்காலம் தொடங்கி இன்றைய வரையில் அந்நாடு அறிவின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்துள்ளது. நடு நாடுகளில் பரவியுள்ள முகம்மதிய சமயத்தைக் கூடக் கீழைநாட்டுச் சமயம் என்று சொல்லிவிட முடியும். ஒரு முறையில் பார்க்கப் போனால் இயேசுவும் கீழை நாட்டவரே ஆவார். மா சே துங் எவ்வளவு முயன்றும் சீனர்கள் வாழ்விலிருந்து பெயர்த்தெடுக்க முடியாத ஒன்றாய் விளங்குவது அவர்தம் சமயம். புத்தர் கோவில் in.6s.T.-6