பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ல் அ.ச. ஞானசம்பந்தன் என்னிடம் வா என்று கூறும் கோட்பாடு கீழை நாட்டிலில்லை. இதனை மேலை நாட்டில்தான் காண முடியும். இந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் தான் இந்நாடுகளில் தோன்றிய சமயங்கள் ஏன் மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை என்பது தெரியும். எல்லாச் சமயத்தில் இருப்பவர்களும் உண்மையை வெவ்வேறு கோணத்திலிருந்து பார்ப்பதால் ஒருவரை ஒருவர் உயர்த்தியோ இழித்தோ காண வேண்டிய தில்லை. இந்த ஒப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் கீழ்நாட்டுச் சமயவாதிகளை மேனாட்டார் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு பாதிரியார் சீனாவுக்குப் போனாராம். பண்புடைய சீனர்கள் சிலரை மத மாற்றம் செய்தாராம். மதம் மாறிய அச் சீனர்கள் கிறிஸ்தவ சமயத்திலே பக்தியுள்ளவர்களாக, நம்பிக்கை யுள்ளவர்களாக ஆனார்களாம். அவர் "பிறருக்காக உன் வாழ்வின் நலங்களைத் தியாகம் பண்ண வேண்டும். இதுதான் கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை' என்று சொல்லிக் கொடுத்தாராம். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், தேவை ஏற்பட்டபொழுது அவர்கள் அதனை மறந்து விட்டார் களாம். எனவே, அந்தப் பாதிரியார் எழுதுகின்றார் "கிழக்கே இருக்கின்ற அத்துணைப்பேரும் யோக்கியதை இல்லாதவர்கள்; நம்பிக்கைக்குத் தகுதியில்லாதவர்கள்; கொள்கை இல்லாதவர்கள். ஆகவே இந்த நாட்டைக் காப்பாற்றவே முடியாது”. இதனைக் கண்ட நார்த்ரோப் அவர்கள் "தவறு அவர்களிடத்திலே இல்லை. பாதிரியாகிய உம்மிடத்திலேதான் தவறு உள்ளது. உங்களுடைய நம்பிக்கையின் அடிப்படை