பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 83 வேறு' என்று கூறியதுடன், மேலும் தொடர்ந்து கூறுகிறார். “இன்று மாலை எம் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு வாருங்கள்” என்று நான் சொல்லு கின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். "இன்று மாலை" என்ற சொல்லே ஒப்புச்சொல். "சாப்பாடு” என்பதும் "வர வேண்டும்” என்பதும் ஒப்புச் சொற்களே. நான் அவரை அழைத்த சமயம் நிலவிய சூழ்நிலையில் நான் சொன்ன சொற்கள் அனைத்தும் உண்மையே. அதில் ஐயமே இல்லை! நேரம் ஆக ஆகச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சூழ்நிலை மாறும்போது இந்த அழைப்பே பொருளற்றதாகவும் ஆகிவிடலாம். இந்தக் கருத்தை ஆழ்ந்து பலமுறை எண்ணினால்தான் தெளிவாக இதனை விளங்கிக் கொள்ள முடியும். இது நமக்கு இயல்பாக உள்ள பழக்கம். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுதல் என்பது சொல்லப்பட்ட பொழுது உள்ள சூழ்நிலை தொடர்ந்து நிலவினால்தான். வெள்ளையர்களிடம் அத்தகைய கருத்து இல்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் சொல்லிய சொல் சொல்லப்படும்பொழுது இருந்த சூழ்நிலை மாறிவிட்டாலும் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே, சூழ்நிலை மாற்றத்தால் நாம் கொண்டுள்ள கொள்கை அவர்கட்குப் புதுமையாக உள்ளது. மேலை நாட்டு வாழ்க்கையில் நாமும் தோய்ந்து விட்டோம். நான் மேலே சொன்ன கருத்தைக் கேட்கும்போது நமக்கே இது புதுமையாக இருக்கும்; தவறுபோலத் தோன்றும், மேலை நாட்டவருடன் பழகிப் பழகி இக்கருத்தின் அடிப்படை உண்மை நமக்கு விளங்காமல் போய்விடுகின்றது. நன்மை என்று ஒன்றைச் சொல்கிறோமே, எது நன்மை? எனக்கு நன்ம்ையாக இருப்பது பிறர் ஒருவருக்கு நன்மையாக இருக்கும் என்று கூற lii.or, or--7