பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 15 கிரித் தைலம் கொண்டுவா. எனக்கு எப்படியோ இருக்கிறது. சீதா : உங்கள் அக்கா மரகதம் வந்திருக்கிருள். மாதவன் : மரக கமா ? எப்போ வங் தாள் ? சீதா :- சாயங்காலத்தான் வங்காள். மாதவன் சாயங்காலத்திலே திருச்சியிலிருந்து ரெயில் இல்லையே கடிதங்கூடப் போடக் காணுேம் ? { சீதா : காஞ்சிவ ரத்திலே இறக்கி விட்டு அங்கிருந்து சாயங்காலம் வங் கார்களாம். மாதவன் : எங்கே காணுேமே : சீதா : நீங்கள் வர கேரமாய் விட்டது. அடுத்த தெரு விலே பெரியம்மாளைப் பார்த்துவிட்டு வருகிறதாகப் போயிருக்கிருள். மாதவன் (அசட்டையாக) சரி சரி, எனக்குப் படுக்கை விரித்துப் போடு. படுத்துக் கொள்ளுகிறேன். சீதா : சாப்பிடவில்லையா ? [சீதா மெத்தையை விரிக்கிருள்.) மாதவன் : எனக்கு எப்படியோ இருக்கிறது. ஒன்றும் வேண்டாம். அக்கக் தைலத்தைக் கொஞ்சம் இடவு. |கட்டிலில் படுக்கிருன்.) சிதா : உங்கள் சிநேகிதர் கூட்டிக் கொண்டு போனரே சிற்றுண்டி உபசாரமெல்லாம் பலம் போலிருக் கிறது ? [சீதா கட்டிலில் அமர்ந்து தைலத்தை நெற்றியில் தேய்க்கிருள்.) மாதவன் : அதெல்லாம் பேச இப்போ முடியாது சீதா. நான் கொஞ்சம் கிம்மதியாகத் துங்கப்பார்க்கிறேன். என்னவோ மாதிரி இருக்கிறது.