பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் ఆదాయే 28 சீதா : கொஞ்சநேரம் தயவுசெய்து நீங்கள் சத்தம் போடாமல் இருங்கள். அவர் அப்படியே அமைதி யாகப் படுக்கிருக்கட்டும். மரகதம் (இன்னும் கோபமாக) அடடா, இந்தப் பாசாங் கெல்லாம் எனக்குத் தெரியாதா? அப்பவும் அவர் போக வேண்டாமென்று எச்சரிக்கை செய்தார். நான் அவர் பேச்சைக் கேட்காமல் வந்தது தப்பா கப் போயிற் று. சீதா : அக்கா, நீங்கள் வந்ததிலே ஒன்றும் கப்பே இல்லை. அவருக்கு உடம்பு சரியில்லையென்று துரங்கப் போகிறபோதே சொல்லவில்லையா நான் ? மரகதம் : அதனுடைய ரகசியமெல்லாம் எனக்கு இப் பொழுது தெரிந்துவிட்டது. நான் அவனே ஏதாவது பணம் வேணுமென்ருே, நகை வேணுமென்ருே வாய் சிறந்து கேட்டேன : பி ற கு எ. க. ற் கு ப் பாசாங்கு ? சீதா. இதைப் பாசாங்கென்ரு கினைக்கிறீர்கள்? அப்படி இல்லவே இல்லை. மரகதம்: போதும், உன்னுடைய பசப்பு வார்த்தை யெல்லாம் எனக்குத் தேவையில்லை. இதோ கான் புறப்படுகிறேன். என் கைப் பெட்டி எங்கே ? சீதா : அக்கா, எனக்கு இருக்கிற கவலைக்கு நீங்கள் வேறு கோபிக்க வேனுமா ? மரகதம்: அடடா, மாயக்கள்ளி, இதெல்லாம் எனக்குக் தெரியும் - சரி, இனிமேல் நான் இந்தப் பக்கம் எட் டிப் பார்க்கிறகே இல்லை. நீயும் உன் புருஷனும் சுகமாக இருங்கள். இந்த வீடு இன்ருேடு எனக்கு அற்றுப்போய்விட்டது.