பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 55 சீதா சரி, இன்றைக்கே புறப்படலாமா ? மாதவன்: ஆமாம், இரவு துரத்துக்குடி எக்ஸ்பிரசி லேயே போவோம். காலையிலே 8, மணிக்குப் பழனி போய்விடலாம். புறப்படுவதற்கு எல்லாம் தயார் செய். திரை காட்சி நான்கு (பழனி மலை மேலே உட் பிராகாரத்திற்கு முன்னலுள்ள முன் மண்டபம். அழகிய கல்தூண்கள் பல காணப்படுகின்றன, மாலை நேரம். சற்றுத் துரத்திலுள்ள மணியின் ஒசை சிறிது. கேட்டு அடங்குகிறது. இரண்டு பக்தர்கள் திருப்புகழ் பாடிக் கொண்டு நுழைகிருர் கள். கையில் மலர் மாலே ஏந்தியிருக்கிருர் கள்.) பக்தர் : (இருவரும் சேர்ந்து பாட்டு) காதவிந்துக லாதி நமோ நம முதல் பக்தன் (பாட்டை இடையிலே நிறுத்தி லிட்டு): வேல் வேல்-வேல் முருகா. இரண்டாம் பக்தன் கலியுக வாதா, முருகா, சாணம். சானம். முதல் பக்தன் . முருகனுடைய பெருமையை யாரால் சொல்ல முடியும் பழனியம்பதியிலே அவர் கலியுக வரதனுகவே காட்சியளிக் கிருர், (மாதவனும் சீதாவும் வருகிருர்கள்.) இரண்டாம் பக்தன் : முருகா சாணம், முதல்வா சர ணம்-பழனி வேலப்பா சரணம்.