பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மனமும் அதன் விளக்கமும் வேண்டுமென்று உளவியலறிஞர் மற்ற மாணவர்கள் அனைவரையும் தாங்கள் கண்ட சம்பவத்தைப்பற்றித் தனித் தனியாக உள்ளதுள்ளவாறு எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டார். அப்படி அவர்கள் எழுதிக் கொடுத்தவற்றையெல்லாம் ஆராய்ந்தபோது முக்கிய மான செய்கைகளைப் பற்றியே மாறுபட்ட குறிப்புகள் காணப்பட்டன. அவர்கள் எழுதினவெல்லாம் ஒரே மாதிரி இருக்கவில்லை. மேலே குறித்த சம்பவம் ஒர் ஆராய்ச்சிக்காகவே நடிக்கப்பட்டது. ஆசிரியருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கு அது வெறும் நடிப்பு என்று தெரியாது. இயல்புக்குத் தக்க வாறு வெவ்வேறு அம்சங்களே மனத்தில் பதிகின்றன. என்பதை மெய்ப்பிக்க இந்தச் சோதனையை அவர்கள் செய்தார்கள். இவற்றிலிருந்து மனத்தைக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துப் பார்ப்பதென்பது சரியல்ல வென்று ஏற்படுகிறது. கையைப்பற்றி அறிய மனம் உதவலாம்; வேறு உறுப்புகளைப்பற்றி அறிந்துகொள்ள மனம் உதவலாம்; ஆல்ை அது தன்னைப்பற்றியே அறிந்துகொள்ளச் சரியான கருவியாகுமா? அதல்ை இம்முறை சரியானதல்லவென்று நடத் தைக் கொள்கையர் ஒதுக்குகிருர்கள். மனம் எவ்வாறு வெவ்வேறு நிலைகளில் நடந்துகொள்கிறது என்பதைக் கவனித்து அதன் மூலமாக மனத்தைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் கருதுகிருர்கள். அதற்காக அவர்கள் மிகப் பல சோதனைகள் செய்திருக் இர்கள். ஏதாவது ஒரு நிலமையை ஏற்படுத்தில்ை அந்த நிலைமைக்குத் தக்கவாறு உயிர்ப் பிராணி களிடத்து ஒரு வகையான செயல் நிகழ்கின்றது என்றும், அந்நிகழ்ச்சிக்கு மனம் என்பதொன்று: