பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மனமும் அதன் விளக்கமும் வற்றை அறிந்துகொள்வதாலும் மனத்தின் தன்மை கள் தெளிவாகின்றன. மனத்தைப்பற்றி இன்னும் எவ்வளவோ விரிவான ஆராய்ச்சிகள் செய்யலாம். அவற்றிற்கெல்லாம் இங்கு இடமில்லை. பொதுப்படையாக எல்லாருக்கும் தெரிய வேண்டிய அடிப்படையான சில முக்கிய விஷயங் களையே இங்கு எடுத்துக் கூற விரும்பினேன். பிறக்கும்போது மனம் என்று ஒன்று தனிப்பட இல்லை என்று சிலர் கூறுகிரு.ர்கள். சில மறிவினைகளை மட்டும் உடையவனாக மனிதன் உலகத்திலே தோன்று கிருன்; அனுபவங்களின் மூலமாக மனம் சிறிது சிறிதாக உருவாகிறது என்பது அவர்களுடைய வாதம். இக் கொள்கைக்கு எதிராக வேருெரு கொள்கை யுண்டு. மனம் என்பது பல வகையான திறமை களுடன் பிறப்பிலே இருக்கிறது என்றும் அது அனுப வத்தால் மலர்ச்சியடைகிறது என்றும் அக் கொள்கை யினர் கூறுகின்றனர். ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டி ஒரு கட்டடம் உருவானது போல மனம் உருவாகிறது என்பது ஒரு கொள்கை. ஆலமரத்தின் சிறு விதைக்குள்ளேயே அந்தப் பெரிய மரம் முழுவதும் மறைந்திருந்து பின்னல் வெளிப்படுவதுபோல மனம் மலர்ச்சியடைகிறது என்பது வேருெரு கொள்கை. - ஏதாவதொரு உயிரினத்தின் மறிவினைகளெல்லாம் ஒரே தன்மையில் அமைந்திருக்கின்றன என்று கண் டோம். மனித இடத்து மறிவினைகளும் அவ்வாறுதா னிருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது ஒரே விதமான