பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்குப்'பெருமை 103 சூழ்நிலையில் ஒரே விதமான அனுபவங்களைப் பெறும் குழந்தைகள் வெவ்வேறு விதமாகச் செயல் புரிவதற் கும், மனப்போக்குக் கொண்டிருப்பதற்கும் காரணம் என்ன? வெவ்வேறு வகையான இயல்புகளுடன் மனம் அமைந்திராவிடில் வேறு வேருன செயல்கள் நிகழ முடியாதென்பது இக் கொள்கையாரின் முடிபாகும். பெற்ருேர்களின் வழியாக வரும் பாரம்பரிய அமைப் பினல் வெவ்வேருண இயல்புகள் காணப்படுகின்றன என்றும், இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாக முற் பிறவி வினைகள் நிற்கின்றன என்ற தத்துவக் கருத்தும் கூறப்படுகின்றன. பல பிறப்புகள் உண்டு என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு. இவ்வாறு அடிப்படைக் கருத்துகளில் மாறுபாடுகள் இருந்தாலும் குழந்தையின் ஐந்து அல்லது ஏழு வயதிற் குள்ளாகவே அதன் பிற்கால வாழ்க்கையின் போக் கிற்கு வேண்டிய பொதுவான மன அமைப்பு ஏற்பட்டு விடுகிறது என்பதில் பெரும்பாலும் கருத்தொருமை காணப்படுகிறது. மனம் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை முடிவாக அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமையிலும் இக் கருத்தை ஏற்றுக் கொள்வதில் தடையொன்றுமில்லை. அனுபவங்களின் மூலமும் சூழ் நிலையின் மூலமும் மனம் என்பது சிறிது சிறிதாகச் சேர்ந்து புதிதாக உருவெடுத்தாலும் அல்லது அவற்றின் மூலமாக மனம் மலர்ச்சியடைந்தாலும் விளைவொன்று தான். ஆதலால் மனத்தின் தோற்றத்தைப் பற்றிய விவாதங்களில் தலையிடாமல் அதன் தன்மைகளை அறிந்துகொள்ள முயல்வது இன்றியமையாததாகும். மனம் நமக்குத் தனிப் பெருமை என்று மீண்டும் கூறுகிறேன். மற்ற உயிரினங்களுக்கு மனம் உண்டு