பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயக் குரங்கு 19 அண்ணுமலே கணக்குத் தேர்விலே வெற்றிபெற வில்லை. “ஏண்டா இப்படி ஆயிற்று?’ என்று கேட்டால், "அது என் குற்றமல்ல. கணக்காசிரியர் சரியாகக் கற்றுக்கொடுக்கவில்லை' என்று அவன் பதில் சொல்லு கிருன். தான் சொல்லுவது சரியான காரணம் என்று கூட அவன் நினைத்துக்கொண்டிருக்கிருன். எனக்குத் தெரிந்த இளங் கவிஞர் ஒருவர் தமது பாடல்களைப் பத்திரிகையாசிரியர்கள் ஏற்றுக்கொள் ளாததற்கு அடிக்கடி ஒரு காரணம் சொல்லுவார். 'இந்த ஆசிரியர்களுக்கு உண்மையான கவிதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளத் தெரியவே தெரியாதுஎல்லாரும் சுவை உணர்ச்சியே இல்லாதவர்கள்' என்று அவர் சினம்பொங்கப் பேசுவார். இவ்வாறு குற்றத்தைப் பிறர்மேல் ஏற்றிச் சொல்லுவதற்கு உளவியலிலே விட்சேபம் என்று பெயர் வழங்குகிறது. விட்சேபத்திற்கும் அறிவுப் பொருத்தம் தேடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல சமயங்களிலே இரண்டையும் பிரித்துப் பார்ப்பதுகூட இயலாமற் போகும். இந்த இரண்டு தன்மைகளுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். தன்னைப்பற்றிப் பிறர் இழி வாகக் கருதக்கூடாது என்ற எண்ணமே இங்கே வேலை செய்கிறது. மனத்தின் மாயச் செயல்களில் இதுவும் ஒன்று. ஆதலால் அந்த மனத்தைப்பற்றி இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப் பொழுதுதான் அதன் மாயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். இதை அடுத்த பகுதியில் காண் போம்.