பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மனமும் அதன் விளக்கமும் உணர்வு, தூற்றுதல், வீளுகச் சண்டையிடல், சிடு சிடுப்பு முதலியவை இதன் விளைவாகப் பிறக்கின்றன. நன்கு புடிக்காத மாணவனுக்குத் தேர்வுநாளன்று கொடிய தலைவலி வந்துவிடுகிறது. பொய்த் தலைவலி யல்ல; உண்மையாகவே தலைவலி, அம்மாணவனுக்கே அதன் காரணம் தெரியாது. மேற்கூறியவையெல்லாம் அந்தப் பொல்லாத மறை மனத்தின் வேலை. இதை நன்கறிந்து கொண் டால் அதனல் பெரிய நன்மையுண்டாகும், ஆசைகளை அடக்கி நசுக்க முடியாமல் அவற்றை உயர் மடை மாற்றம் செய்து விட்டோமானல் அப்பொழுது இவை போன்ற விரும்பத் தகாத கோளாறுசள் ஏற்படா ஆசைகள் எல்லாவற்றையும் அடைய முடியாது. சில வற்றை அடைய முயல்வதும் சமூகத்திற்குத் தீங்காக முடியலாம். ஆதலால் அவைகளை வேறு வழியில் திருப் பித் தனக்கும் சமூகத்திற்கும் நன்மையாகச் செய்து 1)காள்வதே அறிவுடைமையாகும். இவ்வாறு உணர்ச்சி களை வேறு நல்ல வழியில் திருப்புவதற்குத்தான் உயர் மடை மாற்றம் செய்தல் என்று பெயர். இதற்கு மறைமனத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் அறிவும் பெரிதும் உதவி జీప. மறைமனத்தைப் பற்றி மாறுபட்ட பல கருத்து களிருக்கின்றன. அவைகளை அடுத்த பகுதியில் கவனிப்போம்.