பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முனமும் அதன் விளக்கமும் டிற்குப் பிறகு சிலர் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகள் நட்த்த முன் வந்தார்கள். மறைமனத்தைப்பற்றி வி ரி வா. க ஆராயத் தொடங்கவே பல புதிய உண்மைகள் வெளியாயின. மறைமன ஆராய்ச்சியே தனிப் பகுதியாகப் பிரியத் தொடங்கியது. பிராய்டு அதற்கு உளப் பகுப்பியல் (Psychoanalysis) grant to Gu utilt-Lorri. மறை மனத்தைப் பற்றிய உண்மை தெரிந்தது முதல் உளவியலுக்கு ஒரு தனி உயர்வு பிறந்திருக்கிறது. மனிதனுடைய நடத்தைக்கு முக்கிய காரணமாக இருப்பது இம் மறை மனமே என்பது சிலருடைய கருத்து. மனம் ஒரு பனிக்கட் டியாலான குன்று போன்றதென்று அவர்கள் கூறுகிரு.ர்கள். பனிக்கட்டிக் குன்று கடலிலே மிதக்கும்போது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியில் தோன்றும். மற்றப் பகுதியெல் லாம் நீர் மட்டத்திற்கு உள்ளே மறைந்திருக்கும். அது போலவே மனத்தின் ஒரு பகுதிதான் வெளிப்படை யாகத தோன்றி வெளி மனமாக இருக்கிறதென்றும், மற்றப்பகுதி மறைந்துiநின்று மறைமணமாக இருக்கிற தென்றும் அவர்கள் விளக்கஞ் செய்கிரு.ர்கள். இப்படி மனத்தின் பெரும் பகுதி மறைந்திருந்தாலும் அப் பகுதிதான் ஆதிக்கம் செலுத்துகிறதாம். சிக்மண்ட் பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் கூறுவதாவது:-வெளி மனத்தால் நினைப்பவையெல் லாம் மறைமனத்தால் பாதிக்கப்படுகின்றன; ஆனல் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது மிக அரிது. பிராய்டின் கருத்துகளை எல்லா உளவியலறிஞர் களும் ஏற்றுக்கொள்வதில்லை. உளப் பகுப்பியலார்