பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மனமும் அதன் விளக்கமும் வா, வா, பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது' என்று வரவேற்கத் தொடங்குகிருேம். நனவு மனத்திலே அப்பெயர் நின்றிருந்தால் நினை விற்குக் கொண்டுவர அவ்வளவு நேரமாகாது. ஆனல் அது நனவிலி மனத்திற்குள் அழுந்திவிட்டதாகவும் கூற முடியாது. நனவிலி மனத்தில் அழுந்தியதை அவ் வளவு எளிதில் வெளிக் கொண்டுவர இயலாது. ஆதலால் அது இடையிலே எங்கேயோ இருந்திருக்க .ேண்டும். நேற்று உண்ட காய்கறிகளின் பெயர்கள் நமது வெளி மனத்தில் பொதுவாக இருப்பதில்லை. நாம் அவற்றை இப்பொழுது நினைத்துக்கொண்டா இருக் கிருேம்? தனிப்பட்ட சிறப்புக் கொண்டவையாக இருந் தால் மட்டும் ஒருவேளை இப்பொழுது அவற்றை நினைத்துக்கொண்டிருப்போம். ஆனல் சாதாரணமாக அந்த நினைவு நனவு மனத்தில் இருப்பதில்லை. ஆனல் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் நாம் உண்ட காய்கறிகளின் பெயர்கள் நினைவுக்கு வந்துவிடும். இப்படிக் கொஞ்சம் நினைத்ததும் நினைவுக்கு வருபவை எல்லாம் நனவடி மனம் அல்லது இடை மனம் (Subconscious mind) Grsör SY Lb L. G.Fu?øv HG til 15IT&# கூறுவார்கள். நனவு மன்த்ல்த ஒட்டியதுபோலவே உள்ள அடிப்பகுதி இது. அதற்கும் கீழே சூழ்ந்திருப்பது மறை மனம். ஆகவே ஆராய்ச்சியின் பொருட்டு மன மானது நனவு மனம், நனவடி மனம், நனவிலி மனம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றை மனத்தின் மூன்று நிலைகள் என்றும் கூறலாம். மனம் என்று பொதுவாகக் கூறும்போது நனவு மனத் தையே நாம் குறிப்பிடுகிருேம்.