பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவும் கற்பனையும் 33 வயதாக ஆக நினைவாற்றல் குறைவதும் உண்டு. ஆனல் நினைவாற்றலே இல்லாதவர்கள் கிடையாது. யாருக் காவது அவருடைய தாயார் மறந்து போகிறதா? அந்த அளவுக்காவது நினைவாற்றல் இருக்கும். மனம் மிக மாயமானது என்று சொன்னே னல்லவா? அது சில வேளைகளிலே அதற்குப் பிடிக்காத வற்றை மறந்துவிடும். எப்படியோ அவை நினைவில் வராமல் செய்துவிடும். எனக்கு ஒரு நண்பன் இருக் கிருன். அவனுக்கு மற்றவர் கொடுத்திருக்கிற கடனைப் பற்றி உண்மையாகவே நினைவு வராது; ஆனல் எப் பொழுதாவது அவன் ஒரு எட்டணுச் சில்லறை கொடுத்துவிட்டால் அதை மனத்தில் வைத்துக் கொண்டு கேட்டுக்கொண்டே இருப்பான் ! வாழ்க்கையின் முற்போக்குக்கு நினைவாற்றல் மிகத் தேவை. நாம் அடைந்த அனுபவங்கள் தனித் தனியாக நினை வில் இல்லாமற் போனலும் அவற்றின் விளைவாக நாம் எதிர்கால வாழ்க்கையை நல்ல முறையில் அமைத் துக்கொள்ள வேண்டுமல்லவா? நெருப்பைத் தொட் டால் சுடும் என்று குழந்தைக்கு முதலில் தெரியாது. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை நெருப்பு அனு பவம் ஏற்பட்ட பிறகாவது மறுபடியும் நெருப்பைத் தொடாமல் இருக்க வேண்டுமல்லவா? நினைவிலே இரண்டு வகையுண்டு. சொந்த அனுப வத்தைப்பற்றிய நினைவு ஒருவகை. பிறருடைய அனுப வத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அதை நினைவில் வைத்திருப்பது ஒருவகை. சிவாஜியினுடைய வீரச் செயல்களைப் பற்றிக் கேட்டிருக்கிருேம்; படித்திருக் கிருேம். அவை நமது சொந்த அனுபவமல்ல. இருந்