பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மனமும் அதன் விளக்கமும் பார்க்க வேண்டுமென்ற ஆசையே இவ்வாறு கனவில் நிறைவேறியிருக்கிறது. பொதுவாகக் கனவு காணும்போது அதில் நடக் கும் நிகழ்ச்சிகளெல்லாம் உண்மையாக வாழ்வில் நடப் பது போலவே உணர்கின்ருேம். கனவு காண்பவன் அக் கனவில் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக் கேற்றவாறு வாய்விட்டுச் சிரிப்பதும் அழுவதுமுண்டு. குழந்தைகளிடம் இதை அதிகமாகக் காணலாம். கண்ணம்மாளுக்கு வயது நான்கு. அவள் ஒரிரவு துரங்கிக் கொண்டிருக்கும்பொழுதே விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். 'ஏன் இப்படி அழு கிருய்?' என்று சேட்டபோது, அவள் எழுந்து நின்று 'அக்கா என் புதுப் பொம்மையை எடுத்துக்கொண் டாள்' என்று முறையிட்டாள். உண்மையில் யாரும் அவளுடைய பொம்மையை எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். தன் பொம்மையை அக்காள் எடுப்பது போல அவள் கனவு கண்டிருக்கிருள். முதல் நாளில் நடந்த செயலே அவள் கனவில் பிரதிபலித்திருக்கிறது. எல்லாக் கனவுகளும் ஆக்சை நிறைவேற்றத்திற்காக உண்டாவதில்லை. இப்படிக் கூறுவதில் தான் பிராய்டுக் கும் மற்றவர்களுக்கும் கனவைப் பொறுத்தவரையில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. எல்லாக் கனவு களும் ஆசை நிறைவேற்றங்களே என்று பிராய்டு சாதிக்கிருர், மற்றவர்கள் அவ்வாறு கருதுவதில்லை. மேலே கூறிய குழந்தையின் கனவு ஆசை நிறைவேற்ற மல்ல. அதன் உள்ளத்திலிருந்த அ ச் ச த் தி ன் தோற்றமே அது.