பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு 41 முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் பல தடவைகளில் கனவில் தோன்றுகின்றன. ஒரு நாள் நான் ஒரு சிறந்த நூலைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அதைக் கேட்டுக்கொண்டிருந்த பதினெட்டு வயது இளைஞன் ஒருவனுக்குப் புத்தகத்திலே மிகுந்த பற்றுண்டு. அவன் அந் நூலை ஒரு கடையில் காண்பதுபோலவும் அதை வாங்குவது போலவும் அன்றிரவே கனவு கண்ட தாக என்னிடம் மறுநாள் கூறினன். 'பெரும் பான்மையான கனவுகள் அண்மையில் உண்டான மனப் போராட்டங்களையே அடிப்படையாகக் கொண் டிருக்கின்றன” என்று ரிவர்ஸ் (W. H. R. Revers) என்பார் கூறுகிரு.ர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளை யொட்டிவரும் சில கனவுகளும் உண்டு. எனக்கு எட்டு வயதிருக்கும். என்னை விட ஒரு வயது இளையவனை என் தோழன் ஒருவனுடன் வீதியிலே விளையாடிக் கொண்டிருந்தேன். இரண்டு மாடுகள் ஒன்றையொன்று எதிர்த்துச் சீறிக்கொண்டு ஒடி வந்தன. நாங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் அவற்றைக் கவனிக்கவில்லை. ஒரு மாடு மற்ருென்றின் மேல் திடீரென்று பாயவே அது சமாளிக்க முடியாமல் பின்னடைந்தது. இரு மாடுகளும் வந்த வேகத்தில் என் தோழனை அவை காலால் மிதித்துக்கொண்டு சென்றுவிட்டன. அவன் படுகாயமுற்று நினைவிழந்து கிடந்தான். அருகிலே யாருமில்லை. நான் அஞ்சி நடுங்கி அசைவற்று நின்றுவிட்டேன். அது முதற் கொண்டு அடிக்கடி மாடு கொம்புகளால் குத்த வருவது போலவும் தப்பித்துக்கொண்டு ஒடக் கால் வராது நான் தடுமாறுவது போலவும் கனவு காண்கிறேன். இன்றைக்கும் மாட்டைக் கண்டால் எனக்குப் பெரிதும் அச்சம். இதுபோன்று திரும்பித் திரும்பி வரும் கனவு